“ரொம்ப வேதனையா இருந்துச்சு”…பிக் பாஸ் பிரபலம் சச்சனா வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!
தன்னை ஒருவர் பேட் டச் செய்ததாகவும் அவரை தான் போலீசில் பிடித்துக்கொடுத்ததாகவும் சச்சனா நமிதாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
சென்னை : மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான சச்சனா நமிதாஸ் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலிருந்து ஒரு நாளில் வெளியேற்றப்பட்டார். இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து சச்சனா நமிதாஸ் கண்கலங்கிய படி வெளியேறியதைப் பார்த்த ரசிகர்கள் இந்த சின்ன பொண்ணு பாவம் இவருக்குப் பதில் வேறு யாரையாவது வெளியேற்றி இருக்கலாம் என ஆதரவு தெரிவித்தனர்.
சச்சனா நமிதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அவரை பற்றிய சில விஷயங்களும் இணையதள வாசிகள் தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில், மிகவும் முக்கியமாக சச்சனா நமிதாஸ் தன்னுடைய வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட விஷயத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
மகாராஜா படம் வெளியாகி வெற்றி அடைந்த பிறகு, சச்சனா நமிதாஸ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க கலந்து கொண்டு அதில், தன்னை சிலர் தவறான முறையில் தொட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மன வலி பற்றியும் வேதனையுடன் பேசியுள்ளார். அவர் சொன்ன விஷயத்தை பற்றி பார்ப்போம்..
சச்சனா நமிதாஸ் படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு இருக்கிறார். அப்போது அங்கு மெடல் வாங்கும்போது ஒருவர் தவறான முறையில் சச்சனா நமிதாஸை பேட் டச் செய்துள்ளார்.
இதனால் கடுப்பான அவர் அங்கு நிறைய காவல்துறை இருந்ததைப் பார்த்துவிட்டு தன்னை தவறான முறையில் டச் செய்தவரைச் சட்டையைப் பிடித்திழுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். அப்படிச் செய்தாலும் கூட இந்த விஷயத்தால் அவரால் அந்த அளவுக்கு எளிதாக மறக்க முடியவில்லை.
தவறான முறையில் இப்படிச் செய்துவிட்டார் எனப் பல முறை யோசித்துக்கொண்டு இருந்துள்ளார். அங்கு மட்டுமில்லாமல், பேருந்தில் சென்றபோது கூட ஒருவரி இப்படி நடந்துகொண்டுள்ளார். இப்படியான மோசமான சம்பவங்கள் நடந்த காரணத்தால் “கூட்டமாக இருக்கும் இடங்களில் செல்லவே தான் மிகவும் பயந்ததாகவும், அந்த மாதிரி இடங்களுக்குச் செல்ல தவிர்த்ததாகவும்”, அந்த சமயம் வேதனையாக இருந்தது போலப் பேட்டியில் சச்சனா நமிதாஸ் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சச்சனா நமிதாஸ் இதிலிருந்து எப்படி வெளியே வந்தேன் என்பது பற்றியும் பேசினார். இது குறித்துப் பேசிய அவர் ” இது போன்ற பிரச்சினைகளில் நம்மளுடைய மீது எந்த தவறும் இல்லை. தப்பு செய்பவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பதால் நாம் பயந்து அமைதியாக இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. இதனை நான் என்னுடைய மூலையில் ஏற்றிக்கொண்டு தைரியமாக வெளியே வந்தேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான விஷயம் பற்றி சச்சனா நமிதாஸ் பகிர்ந்துகொண்ட நிலையில், இதனைப் பார்த்த பலரும், தப்பு பன்னவனுங்க தைரியமா இருக்கும் போது நீ ஏன் பயப்படனும்மா? எனவும் கவலைப் படவேண்டாம் எப்போதும் தைரியமாக இருங்கள் என அவருக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.
Sachana real life incident 💔
If she comes back, Rest will be history 💪#BiggBossTamil8 #BiggBossTamilSeason8
pic.twitter.com/7S5YD0QJER— BB Mama (@SriniMama1) October 7, 2024