92வது ஆண்டு விமானப்படை தினம்.! சென்னை வானில் மீண்டும் வட்டமடித்த இந்திய விமானப்படை.!

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படையினர் வான் சாகசத்தில் ஈடுப்பட்டனர்.

Indian Air Force

சென்னை : இன்று (அக்டோபர் 8) இந்திய விமானப்படை தினம் கொண்டப்படுகிறது. விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேஜாஸ் , ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் உட்பட 72 விமானங்களின் பிரம்மிப்பூட்டும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் ஒன்றுகூடினர். வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து, இன்று விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானங்கள் ஒவ்வொன்றாகவும், குழுவாக இணைந்தும் வானில் வண்ண புகைகளை வெளியிட்டு வானில் வட்டமடித்தன. இந்த நிகழ்வு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோக்கள் தற்போது இந்திய விமானப்படையின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தின வாழ்த்துக்கள். இந்திய விமானப்படையாது வீரர்களின் தைரியம் மற்றும் செயல்பட்டிருக்காக போற்றப்படுகிறது. நமது நாட்டைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது.” என பதிவிட்டுள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குறிப்பிடுகையில்,  ” விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான வீரர்களுக்கு எனது மனமார்ந்த மரியாதையை தெரிவித்து கொள்கிறேன்.  உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாகவும் வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். ஜெய் ஹிந்த்.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்