இழுபறியாகும் தேர்தல் முடிவுகள்., காங்கிரஸ் vs பாஜக கடும் போட்டி.!
பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. ஹரியானாவில் காலையிலிருந்து காங்கிரஸ் பெரும்பாலும் தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜக முன்னேறி வருகிறது.
மொத்தம் உள்ள 90 இடங்களில் 25 இடங்களில் முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போதைய நிலவரப்படி 48 இடங்களிலும், காங்கிரஸ் 34இடங்களிலும் மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதனால், கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஹரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில், களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலை வகுத்து வருகிறார்.