நவராத்திரி ஆறாம் நாள்.. சண்டிகா தேவியை வழிபாடும் முறை .!
நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம்.
சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு ;
நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம். நவ துர்க்கையில் காத்யாயினி ரூபத்தில் காட்சியளிக்கிறார். சண்டிகா என்றால் உக்கிரமான ரூபமும் போர்குணமும் கொண்ட அம்பாளாக திகழ்கிறார். இந்த நவராத்திரி காலம் அம்பாள் அசுரர்களுடன் போராடி அவர்களை அழிக்கும் தவக்காலமாக இருந்த நாட்களாக கருதப்படுகிறது.
ஆறாம் நாளுக்கான நெய்வேத்தியமாக தேங்காய் சாதமும் வேர்க்கடலை சுண்டலும் வைத்து வழிபாடுகளை செய்யலாம். பூஜைக்குரிய மலர் செம்பருத்தி ,ஜாதிமல்லி அல்லது ஏதேனும் வாசனை மலர்களையும் வைத்து பூஜை செய்யலாம் .அர்ச்சனை செய்ய சந்தன இலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் .
நிறம் கிளி பச்சை பயன்படுத்த வேண்டும் .அன்றைய தினத்தில் அம்பாளுக்கு கிளி பச்சை நிறத்தில் ஆடை அணிவித்து நீங்களும் கிளி பச்சை நிறத்தில் உடை அணிந்து தாம்பூலம் கொடுக்கும் சுமங்கலிகளுக்கும் கிளி பச்சை நிறத்தில் வஸ்திரம் வழங்கலாம். பழம் நார்த்தம் பழம் மற்றும் திராட்சை படைக்கலாம் .
பூஜை செய்ய உரிய நேரம்;
காலை பிரம்ம முகூர்த்தம் மற்றும் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரையிலும், காலை 10:45 ல் இருந்து 11; 45 வரையிலும், மாலை 5 மணியிலிருந்து 9;30 வரையிலும் வழிபாடுகளை வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பாக கூறப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் காயத்ரி மந்திரம் ,லட்சுமி தேவியின் 108 போற்றி போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மேலும் இந்திரா தேவிக்கு உரிய இந்த மந்திரத்தை சொல்லியும் வழிபாடு செய்யலாம் .”ஓம் க்ரீம் இந்திராணி தேவியே நமோ நமக” என்று மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
பலன்கள்;
அன்னை இந்திரா தேவியின் அருளால் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். துன்பம் அகலும் . சண்டிகா தேவியை வழிபடுவதால் அவளின் அருளால் அறியாமல் செய்த பாவம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.