தொடங்கிய ஒரே நாளில் எலிமினேஷன்? பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அந்த போட்டியாளர்?

பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரே நாளில் நிகழ்ச்சியை விட்டு முதல் ஆளாக சஞ்சனா எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BB 8 elimination

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு சீசன்களிலும் மக்களைக் கவரும் வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில மாற்றங்களும் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி தான் இந்த முறை யாரும் இதுவரை எதிர்பார்க்க ஒரு விஷயம் நடந்துள்ளது.

Read More – கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

அது என்னவென்றால், எலிமினேஷன் தான். வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கி 1 வாரம் அல்லது இரண்டு வாரங்கள் பிறகு தான் எலிமினேஷன் சுற்று வைப்பார்கள். இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்கிற வகையில் டிவிஸ்ட் ஒன்றை ஏற்கனவே கொடுத்திருந்த நிலையில், அதற்கு ஏற்ப நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாளில் அதிரடியாக எலிமினேஷன் சுற்று வைக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வெளியேறியுள்ளனர்.

எலிமினேஷன் சுற்றுக்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியீட்டு விஜய் தொலைக்காட்சி இதனை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கி ஒரே நாளில் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, 18 போட்டியாளர்களில் ஒருவராகக் களமிறங்கிய சஞ்சனா தான் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, ஆசையுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு விஜய் சேதுபதி அன்பான அட்வைஸ் ஒன்றையும் கொடுத்து இருந்தார்.

இந்த சூழலில், வந்த வேகத்தில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஆண் போட்டியாளர்கள் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பெண் போட்டியாளர்கள் கலந்துபேசி மாறி மாறி நிபந்தனைகளை வைத்துக் கொண்டார்கள்.

அதாவது, வீட்டிற்குள் வசதியான ஒரு பகுதியைப் பெண் போட்டியாளர்களுக்கு தாங்கள் விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அப்படிச் செய்தால் எந்த பெண் போட்டியாளர்களும் ஒரு வாரத்திற்கு ஆண் போட்டியாளர்களை நாமினேஷன் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்கள். அதற்குப் பெண் போட்டியாளர்கள் சம்மதம் தெரிவித்து நாமினேஷன் சுற்று வந்த பின் சஞ்சனாவை பலரும் நாமினேட் செய்த காரணத்தால் அவர் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்