ஓராண்டு நிறுவைடைந்த போர்! ஆயுதங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தி வரும் இஸ்ரேல்!

இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இது வரை 41,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Isarel - Weapon Exhibition

லெபனான் : கடந்த அக்-7 2023-ம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதலை நடத்தினார்கள். அதில், ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்துவதற்காக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில், போர் நிறுத்த அடிப்படையில் இஸ்ரேல் சிலரை மீட்டது. ஆனால், மீதம் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் ஈடுபட்டு, தாக்குதலை தொடர்ந்து வருகிறது. மேலும், ‘ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்’ என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இதனால், இஸ்ரேல் ஹமாஸ் மீது மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

ஓராண்டான போர் ..!

இந்த தாக்குதல் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதில், இதுவரை 41,000-திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1000-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,  ஹமாஸ் அமைப்பைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலை தாக்கியது, இதற்கும் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கிய புள்ளிகளான பலரும் உயிரிழந்தனர்.

குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியானார். மேலும், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், இரான் இஸ்ரேல் மீது குண்டு மழைப் பொழிந்தது. இதனால் தான் அமைப்புகளுக்கு இடையே நடைபெற்று வந்த தாக்குதல், ஈரான்- இஸ்ரேல் போராக உருமாறியது.

கடந்த வாரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் 100-க்கும் மேற்பட்ட எதுவக்கணைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு ஈரான் மீது எதிர்த்தாக்குதல் நிச்சயமாக நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இப்படி போர் மூண்டு கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்கா, உட்பட சில அரேபியா நாடுகளும் 2 நாடுகளுக்கும் பின்னாடி நின்று மாறி மாறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் நடத்தும் கண்காட்சி

இந்தச் சூழலில், அந்த அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்த வெடிபொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேல் கண்காட்சி நடத்தியுள்ளது. இதில் மொத்தமாக, 70, 000திற்கும் மேற்பட்ட பொருட்களை முடக்கியிருக்கிறோம். அதிலும், பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

சூழலில், அந்த அமைப்பிடம் இருந்து பறிமுதல் செய்த வெடிபொருட்களை கொண்டு இஸ்ரேல் கண்காட்சி நடத்தியுள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் படை வெளியிட்டு உள்ள செய்தியில், எதிரிகளின் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை முடக்கி இருக்கின்றனர். அதில், பீரங்கிகளை அழிக்கும் 1,250 ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் 4,500 வெடிபொருள் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும் என கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ல் தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை கொண்டும் மற்றும் காசா போரின்போது பறிமுதல் செய்த பொருட்களைக் கொண்டும் கண்காட்சி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம் எனவும் மேலும், உலகத்திற்கு காட்சிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம் எனவும் இஸ்ரேல் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்