“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!
தனது 'வீனஸ் டூர்ஸ்' நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது குறித்து ஊக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் அஜித் பேசிய அந்த வீடியோவில், ” மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீதும் உங்களுக்கு வெறுப்பைத் தூண்டும் என்ற பேச்சு இருக்கு. இது உண்மைதான். ஆனால், மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்காத முன்பே அவர்கள் குறித்து தவறான மதிப்பீடுகளை நாம் செய்து விடுவோம்.
நான் பயணத்தின் போது வெவ்வேறு தேசம், வெவ்வேறு மத மக்களை சந்தித்தேன் அவர்கள் கலாச்சாரத்தை அனுபவித்தேன். நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேச, மத, கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள்.
இதன்மூலம், உங்களை சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும். ஒரு பயணம் சாதி, மத பேச்சுக்களை உடைத்து அணைவரிடமும் நெருங்கி பழக உதவுகிறது.” இவ்வாறு பேசியுள்ளார்.
Fueling passion for adventure! 🏍️ #AjithKumar on a thrilling journey with #VenusMotortours. Experience the best of Indian bike tours, where every ride is a story of freedom and speed! 🇮🇳✨@VenusMotoTours @Donechannel1 @Dubai_Autodrome#BikeTours pic.twitter.com/YwqKK7BiNF
— Suresh Chandra (@SureshChandraa) October 5, 2024