நவராத்திரி நான்காம் நாள் ஸ்பெஷல்..! கதம்ப சாதம் செய்வது எப்படி..?
நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை –நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி= ஒன்றரை கப்
- துவரம் பருப்பு= அரை கப்
- நல்லெண்ணெய்= ஐந்து ஸ்பூன்
- நெய் இரண்டு= ஸ்பூன்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- மஞ்சள்தூள் =அரை ஸ்பூன்
காய்கறிகள் ;
- வாழைக்காய்= ஒன்று
- கேரட்= இரண்டு
- வெள்ளை= பூசணி அரைக்கப்
- அவரக்காய் =அரை கப்
- பச்சை வேர்க்கடலை =கால் கப்
- பச்சை மொச்சை =கால் கப்
- கத்தரிக்காய்= நான்கு
- தேங்காய் =அரை கப் துருவியது
- புளி = எலுமிச்சை சைஸ்
மசாலா அரைக்க ;
- கடலை பருப்பு =ஒரு ஸ்பூன்
- மல்லி = இரண்டு ஸ்பூன்
- மிளகு= அரை ஸ்பூன்
- வெந்தயம்= கால் ஸ்பூன்
- வரமிளகாய்= நான்கு
செய்முறை;
பச்சரிசி மற்றும் துவரம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் சேர்த்து ஐந்து கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி மிளகு , கடலைப்பருப்பு ,மல்லி, வர மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பவுடராக்கி கொள்ளவும். பிறகு அதே வாணலியில் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். திரும்பவும் அதே பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சுண்டக்காயையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும் .இப்போது காய்கறிகளை நறுக்கி காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதம் வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு உப்பு மற்றும் புளிக்கரைசலை சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து நாம் அரைத்து வைத்துள்ள தூளையும் சேர்த்து கலந்து விட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.இப்போது மற்றொரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் குக்கரை திறந்து வேக வைத்துள்ள காய்கறி கலவையை அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும். பிறகு வறுத்து வைத்துள்ள தேங்காய் ,சுண்டைக்காய், நெய் மற்றும் தாளிப்பு , சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி நன்கு கலந்து விட்டு இறக்கினால் வித்தியாசமான சுவையில் கதம்ப சாதம் தயார்.