களைகட்டும் விமானப்படை சாகச நிகழ்ச்சி: சென்னையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்?

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவிருக்கும் 'இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சிக்கு பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Chennai - Take Diversion

சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு, நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மெரினா சாலை காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்துக்கொள்ளலாம்.

மேலும், சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க, MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

பார்க்கிங் ஏற்பாடுகள்

காமராஜர் சாலை

வாகனம் நிறுத்துமிடம் : 

  1. கடற்கறை சாலை VIP & VVIP கார் பார்க்கிங்
  2. பிரசிடன்சி கல்லூரி
  3. சுவாமி சிவானந்த சாலை
  4. லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்)

சாந்தோம் சாலை

வாகனம் நிறுத்துமிடம் : 

  1. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி
  2. செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி
  3. புனித சாந்தோம் பள்ளி
  4. செயின்ட் பெட்ஸ் மைதானம்
  5. கதீட்ரல் ஆரம்ப பள்ளி
  6. சமுதாய கூடம், சாந்தோம்
  7. லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்)

ஆர்.கே சாலை

வாகனம் நிறுத்துமிடம் : 

  1. MRTS – லைட் ஹவுஸ் சாலை
  2. NKT பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு)
  3. குயின் மேரிஸ் கல்லூரி
  4. புனித எபாஸ் பள்ளி

வாலாஜா சாலை

வாகனம் நிறுத்துமிடம் : 

  1. கலைவாணர் அரங்கம்
  2. ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு)
  3. விக்டோரியா விடுதி மைதானம்

அண்ணாசாலை

வாகனம் நிறுத்துமிடம் : 

  1. தீவுதிடல் மைதானம்
  2. PWD மைதானம் (செயலகம் எதிரில்)
  3. மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை
  4. எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை

போக்குவரத்து மாற்றங்கள்

  • காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு.
  • திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி செல்ல வாகனங்களுக்கு தடை. அதற்கு பதிலாக, சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் வழியாக அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • பாரிஸில் இருந்து காமராஜர் சாலை வழியாக திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை. மாறாக, அண்ணாசாலை மற்றும் தேனாம்பேட்டை சாலை காந்தி மண்டபம் வழியாக திருவான்மியூர் செல்லலாம்.
  • MTC பேருந்துகள் அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக செல்லலாம்.
  • இதேபோல், கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம்.
  • குறிப்பாக, காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்