கலைத்துறை வித்தகர் விருது : பி.சுசீலாவை நேரில் அழைத்து கௌரவித்த முதலவர் ஸ்டாலின்!

கலைஞர் வித்தகர் விருதை வழங்கிய பின், பி.சுஷீலாவுடன் இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Susheela - Mu.Meththa - MK Stalin

சென்னை : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை போற்றிடும் வகையில் கவிஞர் மு,மேத்தா மற்றும் பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

முன்னதாக, சமீபத்தில் கடந்த 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை பாடகி சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தலைமை செயலகம் வந்த பி.சுசீலாவுக்கும், மு. மேத்தாவுக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதையும் வழங்கி தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், நினைவு பரிசையும் வழங்கி கௌரவித்தார்.

மேலும், தலைமை செயலகத்தில் வயது முதிர்வு காரணமாக வீல்சேரில் வந்திருந்த பி.சுசீலாவிடம் முதல்வர் ஸ்டாலின், உடல் நலன் குறித்து விசாரித்தார்.  அதற்கு பதில் கூறிய பி.சுசீலாவும் முதல்வர் ஸ்டாலினை தொட்டு நலம் விசாரித்திருப்பார். மேலும், வெகு நேரம் இருவரும் பேசியிருப்பார்கள்.

அதைத் தொடர்ந்து பாடகி பி.சுசீலா தனது இனிமையான குரலில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி இருப்பார், அவருடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலினும் பாடியிருப்பார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த் நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத்துறையில் உள்ள அட்சகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்