இஸ்ரேல் உதவியால் ISIS ஆல் கடத்தப்பட்ட யாசிதி சிறுமி.. 10 வருடங்கள் பிறகு மீட்பு!

ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ISIS ஆல் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Yazidi girl

ஈராக் : சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து இஸ்லாமிய அரசு (ISIS) கடத்திச் செல்லப்பட்ட  21 வயதுடைய இளம்பெண்ணை காசாவில் இருந்து ஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளும் அந்த பெண்ணை மீட்ட வீடியோக்களை வெளியிட்டன.

பின்னர், அந்த இளம் பெண் ஈராக்கின் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஃபௌசியா சிடோ என அடையாளம் காணப்பட்டார். ஃபௌசியா சிடோ (Fauzia Sido) என்ற இந்த பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ISIS ஆல் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார். அப்போது, ஃபௌசியாவுக்கு 11 வயது என்று கூறப்படுகிறது.


ஈராக் அரசாங்கதிற்கு காசாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் ISIS பயங்கரவாதி குழு ஹமாஸுக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அமெரிக்கா உதவியுடன் அந்த சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காசாவில் சுமார் 4 மாத ரகசிய நடவடிக்கைக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவம் அந்த சிறுமியை தற்பொழுது மீட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாமிய அரசு, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இந்த (யாசிதி) சமூகத்தின் மீது, இஸ்லாமை ஏற்குமாறு அழுத்தம் கொடுத்தது. ஆகஸ்ட் 2014 இல், ஈராக்கின் சன்ஜார் மாகாணத்தில் யாசிதி சமூகத்திற்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கியது.

அப்பொழுது, சுமார் 6000 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக ஐநா அறிக்கையே கூறுகின்றது. ஈராக் அதிகாரிகளின் கூற்றுப்படி, அதில் இவர்களில் சுமார் 3500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 2600 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்றும்,  அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் சொல்லப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, அவர்களில் பெரும்பாலோர் இறந்துவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. இருந்தாலும், அவர்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிருடன் இருக்கலாம் என்று யாசிதி சமூகம் நம்புகின்றனர்.

யாசிதி

யாசிதி சமூகத்தை சேர்ந்தவர்கள் குர்தி மொழி பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழுவினர். இவர்கள் சியா, சூபி இசுலாமியச் சமயங்களின் சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்