IND vs BAN : முதல் டி20க்கு எதிர்பார்க்கப்படும் ‘பிளையிங் லெவன்’! இவருக்கு இடம் இல்லையா?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டி20 தொடரானது வரும் செப்-6 ம் தேதி தொடங்கவுள்ளது.

India Playing XI

குவாலியர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு விளையாடி வரும் சுற்று பயணத்தில், அடுத்ததாக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதல் போட்டியானது வரும் ஞாயிற்றுகிழமை (அக்.6ம் தேதி) மாலை 7.30 மணிக்கு குவாலியர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

முன்னதாக பிசிசிஐ, வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான அணியை அறிவித்திருந்தது. அதை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்றாலும், பல ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளை பிசிசிஐ-யிடம் முன்வைத்தனர்.

மேலும், அந்த கேள்விகளுக்கான விளக்கத்தை இந்த டி20 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற போகும் இந்த டி20 தொடரின் முதல் டி20 போட்டிக்கான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ‘ப்ளெயிங் லெவேன்’ சமூக தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

அந்த அணியில் ஸ்பின்னர்களை விளாசும் சிவம் துபே இடம் பெறவில்லை. அதே போல அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இருக்கிறார். சமீபத்தில், நடந்து முடிந்த இலங்கை அணியுடனான டி20 தொடரில் ரிங்கு சிங் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனால், பேட்டிங்கில் மட்டும் சிறந்து விளங்கிய ரிங்கு சிங் பவுலிங்கிலும் ஜொலிப்பதால் இந்த மாற்றம் நிகழலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் களமிறங்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ப்ளெயின் லெவேன் :

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.

டி20 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் :

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்