தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தினம் தினம் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
விருதுநகர், தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர் மற்றும் திருப்பத்துர் ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 4, 2024