அடுத்த 3 நேரத்திற்கு இந்த 13 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்.!
13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புவுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.