விஜய் மல்லையா-அருண் ஜெட்லி இடையே ரகசிய ஒப்பந்தம்…!மல்லையா நாட்டைவிட்டு ஒட உதவி செய்தவர் அருண் ஜெட்லி …!திடுக் தகவலை கூறிய ராகுல் காந்தி
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், 2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், விஜய் மல்லையா-மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இடையே உள்ள ரகசிய ஒப்பந்தம் தெளிவாகியுள்ளது. ஒரு குற்றவாளி நாட்டைவிட்டு ஒட, அமைச்சர் துணை போய் உள்ளார்.அருண் ஜெட்லியை சந்தித்த பின்னர்தான் விஜய் மல்லையா வெளிநாடு சென்றார். லண்டன் செல்வதாக ஜெட்லியிடம் மல்லையா தெரிவித்துள்ளார்.மேலும் விஜய் மல்லையா லண்டனுக்கு செல்லப் போவதாக கூறியிருந்தும் அந்த தகவலை சிபிஐ, அமலாக்கத்துறை அல்லது காவல்துறைக்கு ஏன் அருண்ஜேட்லி தெரிவிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.