எண்ணெய் கிடங்கை குறிவைக்கும் இஸ்ரேல்? உச்சம் அடையப் போகும் கச்சா எண்ணெய் விலை?
இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு சண்டை நீடித்து வருவதனால் நேற்று ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 76 டாலருக்கு எகிறி உள்ளது.
லெபனான் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு என்பது பெரிதளவு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகளையும் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அந்நாட்டோடு எண்ணெய் தொடர்பாக இறக்குமதி செய்யும் நாடுகளில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறுகிறார்கள். அதிலும், குறிப்பாக பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, விலை மாறாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்தால் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்படும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, உலக அளவில் ஒரு பேரல்கச்சா எண்ணெய் $71 டாலருக்கு விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், நேற்று முந்தினம் ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலால் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை $76 -டாலருக்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்த இரு நாடுகளின் பொருளாதாரத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்தால் எண்ணெய் தொடர்ந்து கிடைப்பதிலும், அவைகளின் ஏற்றுமதியில் சிக்கல் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஈரானை எண்ணெய் தேவைக்காக நம்பியிருக்கும் பல நாடுகள் பெரிதளவு பதிப்படைவார்கள்.
இதனால், அந்த நாடுகள் எண்ணெய் தேவைக்காக மாற்று நாடுகளை தேடும்போது, கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. அதிலும், நம் இந்தியா பிற நாடுகளைத் தான் சார்ந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் விலை உயர்வு ஏற்பட்டால் பொருட்களின் விலை, பணவீக்கம் என அனைத்தும் உயரும்.
இதனால், வேறு சில நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியும் குறைவதற்கான அபாயமும் உள்ளது. இதனால், இந்தியா போன்ற 3-ஆம் நாடுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் இந்த தாக்குதலில் நடுநிலையாகவே இருந்து வருகின்றனர்.