நெதென்யாகுவை தீர்த்து கட்டுவோம் ..! மிரட்டல் விடுத்த இரான் உளவுத்துறை!

இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஈரான் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Israel - Benjamin Netanyahu - Iran

லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலிய தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தீவிரமானத் தொடர் தாக்குதலை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நேற்று முன்தினம் இரவு மேற்கொண்டது.

இந்த தாக்குதலில், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம், உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் போர் பதற்றம் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ‘லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட வேதனையை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும் எனவும் எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம் எனவும்’ தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் மீதான இந்த தீடிர் ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்கப் படைகளுக்கு பைடன் அறிவுறுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரான், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு அவர்கள் பெயர்களை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், இஸ்ரேலும் இரான்  மீதான தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்