இஸ்ரேல் vs ஈரான்: வலிமையான ராணுவம் எது?
இஸ்ரேல் vs ஈரான் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் : ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை கொடுத்திருந்தது.
அதன்பிறகு, முதலில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. பின், அடுத்ததாகத் தரைவழி தாக்குதலையும் நடத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த போரில் , மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் 3 முக்கிய விமானப்படைத் தளபதிகள் உட்பட 8 ராணுவ வீரர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்க அமெரிக்க இருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் vs ஈரான் இரு நாடுகளின் ராணுவ பலம் பற்றி இந்த பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.
இராணுவ பலம்
இஸ்ரேல்
மக்கள் தொகையில் 90.43 லட்சம் கொண்ட இஸ்ரேலில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கை மட்டுமே 1.70 லட்சம் ஆகும். இஸ்ரேலிடம் உள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை மட்டும் 241 ஆகும். அதிலும் பீரங்கிகள் 1,996-களும், ராக்கெட் லாஞ்சர்கள் 150-கழும், போர்க்கப்பல்கள் 67களும், நீர்மூழ்கி கப்பல்கள் 5-ம், ரோந்து கப்பல்கள் 45-ம் உள்ளன.
மேலும், இஸ்ரேலிடம் 612 விமானங்களை மொத்தமாக கொண்டுள்ளது. இதில், 241 போர் விமானங்கள் மற்றும் 146 ஹெலிகாப்டர்கள் அடங்கும், 48 தாக்குதல் ஹெலிகாப்டர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரான்
அதே போல மக்கள் தொகையில் 8.75 கோடியைக் கொண்ட ஈரானில், ராணுவ வீரர்கள் எண்ணிக்கை மட்டும் 6.10 லட்சமாகும். இரானிடம், 186 போர் விமானங்கள், 1,370 பீரங்கிகள், 775- ராக்கெட் லாஞ்சர்கள் ,101 போர்க்கப்பல்கள், 19 நீர்மூழ்கி கப்பல்கள். 21 ரோந்து கப்பல்களும் உள்ளன. அதைப்போல, ஈரானிடம் மொத்தம் 551 விமானங்கள் உள்ளன, இதில் 186 போர் விமானங்கள் மற்றும் 129 ஹெலிகாப்டர்கள் உள்ளன, அவற்றில் 13 தாக்குதல் ஹெலிகாப்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
இதனால், எண்ணிக்கைகள் அடிப்படையில் பார்த்தோமானால் இஸ்ரேலை விட ஈரான் அதிக பலத்துடன் உள்ளனர். ஆனால், இஸ்ரேலை எடுத்து கொண்டால் அதி நவீன தொழில் நுட்பங்கள் உள்ளது. அது மட்டும் இன்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் கொண்டுள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற ராணுவம் போரில் நுழைந்தால் அதிக இழப்பு என்பது ஈரானையே சேரும்.