நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு? வெளியான புதிய தகவல்.!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், நாளை வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் கடந்த 30- ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் நடந்த பரி சோதனையில் ரஜினிகாந்தின் இதயத்தில் இருந்துரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினார்.
இந்த சிகிச்சைக்கு பின்னர், ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார்’என அவரது மனைவி லதா தெரிவித்து இருந்தார். மேலும் இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சிகிச்சைக்கு பின்னர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், நாளை வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ரஜினிகாந்த் ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.