பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு! இஸ்ரேல் வீரர் 8 பேர் உயிரிழப்பு!
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான தாக்குதலில் உயிரிழந்த 8 இஸ்ரேல் ராணுவ வீரருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
லெபனான் : நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது.
முன்னதாக வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நிலையில், அடுத்ததாக தரைவழி தாக்குதலையும் தொடர்ந்தது. தற்போது, ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதில், மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் 3 முக்கிய விமானப்படைத் தளபதிகள் உட்பட 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானை முறியடிக்க அனைவரும் ஒன்றாக பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனால், இஸ்ரேல் 8 வீரர்களை இழந்த நிலையில் நடத்தி வரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதே போல, சிரியாவின் டெமாஸ்கஸ் நகர் மீதும் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி இருக்கிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த போர் தீவிரமடைவதால் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.