விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்..! நிவாரண பணியின் போது நேர்ந்த அதிர்ச்சி!
பீகாரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
பீகார் : கடந்த சில நாட்களாக நம் அண்டை நாடான நேபாளத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பீகாரிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், பீகார் எல்லையில் உள்ள தடுப்பணையிலிருந்து லட்சக்கணக்கான கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
இதனால், பீகாரில் உள்ள முக்கிய நகரங்கள், கிராமங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும், ஊருக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று முசாபர்நகருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே நோக்கி விழுந்தது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சாமர்த்தியமாக யோசித்த விமானி உடனடியாக தரை இறக்கி இறக்கி இருக்கிறார்.
அவர் தரையிறக்கிய பொது அது நேராக அங்கு தேங்கி இருந்த வெள்ளநீரில் விழுந்ததால் அங்கு சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உடனே ஹெலிகாப்டரில் இருந்த வீரர்களை காப்பாற்றும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இது தொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#BREAKING: बिहार में सेना का हेलीकॉप्टर क्रैश..
मुजफ्फरपुर के औराई प्रखंड स्थित देसी बाजार में राहत पैकेट बांटने के दौरान हेलीकॉप्टर क्रैश…#Bihar । #BiharFloodRelief#BiharFlood pic.twitter.com/coJgzQQqOE
— Satyam Chaudhary (@SCHAUDHARY4949) October 2, 2024