சோனி கேமராவுடன் புதிய Vivo போன்.. இந்தியாவில் விற்பனை.! 80W சார்ஜர் உடன் சிறப்பு அம்சங்கள் இதோ.!

Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

Vivo V40e

சென்னை : ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமான Vivo நிறுவனம், அதன் புதிய மாடலான Vivo V40e 5G-ஐ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த  மொபைல் போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்பொழுது, Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டாவது வேரியண்டின் விலை ரூ.30,999 ஆகவும் விற்பனைக்கு வந்துள்ளது.

சலுகை மற்றும் எங்கே வாங்கலாம்

நீங்கள் HDFC வங்கி அல்லது SBI கார்டு வைத்திருந்தால், அதற்கு உடனடி 10% தள்ளுபடி அல்லது பிளாட் 10% எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் பெறலாம். Vivo V40e 5G மொபைல் ஃப்ளிப்கார்ட், விவோவின் இ-ஸ்டோர், குரோமா, விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் இணையதள வழியாக பெற்றுக்கொள்ளலாம்.

அம்சங்கள்

இந்த மொபைல் 6.77-இன்ச் முழு-HD+ (2,392 x 1,080 பிக்சல்கள்) 3D வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. 120Hz புதுப்பிப்பு வீதம், 93.3 சதவிகிதம் திரை-க்கு விகிதம், HDR10+ குறைந்த நீலம், HDR10+ ஆதரவு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

AMOLED டிஸ்ப்ளே ஆனது 4,500-nits உச்ச பிரகாசம் மற்றும் 1,200-nits உயர் பிரைட்னஸ் மோட் பிரகாசத்தை வழங்கும். இந்த மொபைல் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜர் உடன், 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதில் பின்புற கேமரா 50MP Sony IMX882 சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் மற்றும் ஆரா லைட்டுடன் இணைக்கப்பட்ட 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் அடங்கும். Vivo V40e முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமராவைத் கொண்டுள்ளது.

Vivo V40e ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 மதிப்பீட்டுடன் வருகிறது. மேலும், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது 0.749cm (7.49mm) தடிமன் மற்றும் 183g எடையுள்ளதாக இருக்கும். Vivo V40e ஆனது ராயல் ப்ரோன் மற்றும் புதினா கிரீன் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்