IND vs NZ : நியூஸிலாந்து டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு? மாற்று வீரர் இவரா?

நியூஸிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே வரும் அக்.-16-ம் தேதி 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது தொடங்கவுள்ளது.

Bumrah

சென்னை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் அக்-6ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்ததாக நியூஸிலாந்து அணி, இந்திய அணியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவுக்கு இந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால்,

இந்திய அணி தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இது ஒரு புறம் இருக்கையில், இந்த ஆண்டின் இறுதியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

இதுவும் இந்திய அணிக்கு முக்கியமான தொடர் என்பதால் இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களையும் பிசிசிஐ பத்திரமாக பார்த்து வருகிறது. இதனால், இந்திய அணியின் வேக பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவிற்கு நடைபெறவுள்ள இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அவருக்குப் பதிலாக குலதீப் யாதவ் அல்லது ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை விளையாட வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் ஆஸ்திரேலிய அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் பும்ரா மீண்டும் அணியில் இடம்பெறலாம் எனத் தெரியவந்துள்ளது.

பும்ரா போன்ற முக்கிய வீரர்களுக்கு, முக்கியமான தொடரில் விளையாட வைக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காகவே பிசிசிஐ அவருக்கு ஓய்வளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பும்ரா, நடந்து முடிந்த இந்த வங்கதேச அணியுடனான தொடரில் கூட சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ விரைவில் வெளியிடுவார்கள் எனக் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்