தவெக மாநாட்டிற்கு பூமி பூஜை எப்போது.! வெளியானது புதிய தகவல்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

TVK Maanadu

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதியன்று விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூஜை காலை 8 மணிக்கு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் புஸ்ஸி ஆனந்த். அதன்படி, அவரது தலைமையில், பூஜை நடைபெற உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அரசியல் கட்சிகளின் கொடி விவகாரத்தில் தோதல் ஆணையம் தலையிடாது என்று பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மூலம் விஜய கட்சி கொடி விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகிகள் உடன் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நேரில் சென்று அழைப்பு விடுத்ததோடு, மாநாட்டிற்கு எவ்வாறு வருகை தர வேண்டும் என்றும் என அறிவுறுத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்