தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.400 உயர்வு.!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440 ஆகவும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை :  கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.400 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.50 அதிகரித்து, ரூ.7,100ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.56,800ஆக விற்பனையாகிறது.

today gold price
today gold price [file image]
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440 ஆகவும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளி விலை எந்த மாற்றமின்றி 1 கிராம் ரூ.101 ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹1.01 லட்சமாகவும் விற்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்