முண்டியடித்த நபர்… வழியை விடாத மக்கள்…கடுப்பாகி தாக்கிய ராம் குமார்?

சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது மக்கள் வழி விடாததால் ஆத்திரத்தில் அருகில் இருந்தவர்களை ராம் குமார் தள்ளிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ramkumar Ganesan

சென்னை : சில பிரபலங்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, மக்கள் செய்யும் சில விஷயங்களால்
பொறுமையை இழந்து கோபத்தை வெளிக்காட்டுவதைப் பார்த்திருக்கிறோம். அப்படி தான், நடிகர் ராம்குமார் சிவாஜி பிறந்தநாள் விழாவின் போது முன்னால் வர முண்டியடித்த நபரைச் சரமாரியாகத் தாக்கி உள்ளே தள்ளியும், வழிவிடாதவர்களைத் தள்ளியும் விட்டுள்ளார்.

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி அவருடைய குடுப்பதினர்கள் மரியாதையைச் செலுத்தி வந்தார்கள். மக்கள் பலரும் வருகை தந்திருந்தார்கள்.

அப்போது நடிகர் பிரபு, தான் நடிக்கும் அடுத்த படமான ராஜபுத்திர என்கிற படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டரையும் குடும்பத்துடன் தன்னுடைய தந்தையின் மணிமண்டபத்தில் வைத்து ரிலீஸ் செய்தார். அப்போது, ராம் குமார் நின்று கொண்டிருந்தபோது இருவர் பின்னாடி இருந்து முன்பே கேமராவுக்கு தெரியும் படி வந்தார்.

இதனைக்கவனித்த, ராம் குமார் ஆத்திரம் அடைந்து பின்னாடி போ என்கிற கோணத்தில் வேகமாகத் தனது கை முட்டியை மடக்கி அந்த நபரைத் தாக்கி உள்ளே தள்ளிவிட்டார். இந்த வீடியோ ஒரு பக்கம் வைரலாகி வந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் பொது மேடையில் இப்படியா நடந்துகொள்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.

அந்த வீடியோவின் சர்ச்சையை நின்ற பாடு இல்லை அதற்கு அடுத்ததாக மற்றொரு வீடியோவும் வெளியாகி அவர் மீது கூடுதலாக விமர்சனங்கள் எழுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ராம் குமார் சென்றுகொண்டிருந்தபோது சிலர் வழி விடாமல் நின்றதால் கோபத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்.

இப்படியான சம்பவத்தில் ராம் குமார் ஈடுபட்டதைப் பார்த்த பலரும் வாயால் தள்ளி போங்க என்று சொல்லியிருக்கலாம் அதனைவிட்டு விட்டு அவர்கள் மீது கை வைக்க யார் உரிமை கொடுத்தார்கள்? எனக் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

VIDEO credit TO Polimer News

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth