மகாளய அம்மாவாசை அன்று பித்ரு தோஷம் நீங்க இந்த 4 விஷயத்தை செஞ்சா போதும்..!

நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது என்பது நம்முடைய வாழ்நாள் கடமையாக கூறப்படுகிறது.

mahalaya amavasai (1)

சென்னை – மகாளய அமாவாசையை எவ்வாறு வழிபடுவது என்றும் அன்று முன்னோர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் மூலம் செய்ய தெரிந்து கொள்ளலாம்.

மாதம் தோறும் அமாவாசை வருகின்றது இந்த அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். மாதம் தோறும் முன்னோர்களுக்கு செய்ய முடியாதவர்கள் இந்த மகாளய  அமாவாசை அன்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் செலுத்துவது என்பது நம்முடைய வாழ்நாள் கடமையாக கூறப்படுகிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த தலையாய கடமையை செலுத்துவது அவசியம் என சாஸ்திரமும் கூறுகின்றது.

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய 4 வழிபாடு;

1.தர்ப்பணம் கொடுத்தல் ;

முதலில் எள்ளும் தண்ணீரும் கொடுக்கும் முறை பித்ருக்களுக்கு மிகவும் பிடித்த தர்ப்பணம் ஆகும் .எள்ளும் தண்ணீரும் இரைத்திடும் எளிய தர்ப்பணம் கொடுக்கும் முறையை நீங்கள் வீட்டிலோ அல்லது அந்தணரை அழைத்தோ செய்து கொள்ளலாம் .காலையில் குளித்துவிட்டு சூரிய உதயத்திற்கு பின் ஆறு மணிக்கு மேல் எள்ளும்  தண்ணீரும் இரைத்துக் கொள்ளலாம். நீங்கள் இரைக்கும் எள்  மீண்டும் முளைக்கக் கூடாது. எள்ளும்   தண்ணீரும் இறைத்த பிறகு சிங்க்  அல்லது எள்  முளைக்காத இடத்திலோ சிந்தி விட வேண்டும்.

இந்த எள்ளும் தண்ணீரும் இறைப்பதற்கு முன் உங்களுடைய முன்னோர்களை மனதார நினைத்து ‘நான் என்னுடைய குடும்பம் மற்றும்  சந்ததியினர் இன்று நலமாக இருக்கிறோம் என்பதற்கு காரணம் நீங்கள்தான். உங்களுக்கு நாங்கள் ஏதாவது தவறிழைத்திருந்தால் அல்லது வணங்க மறந்திருந்தால் அதற்காக எங்களை மன்னித்து எங்கள் வம்சம் தலைப்பதற்கு முன்னோர்களாகிய நீங்கள் அரணாக இருந்து காப்பாற்றுங்கள்’ என பிராத்தனை செய்து கொண்டு எள்ளும்  தண்ணீரும் இருக்க வேண்டும்.பிறகு ஆதித்த பகவானே  வழிபட வேண்டும். இந்த முறையை காலை ஆறு மணியிலிருந்து மதியம் 12 மணி வரை செய்து கொள்ளலாம்.

2.தானம் செய்தல் ;

எள் இறைத்த பிறகு காலை 10 லிருந்து 11 மணிக்குள் கட்டாயம் இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். ஏனெனில் நம் முன்னோர்கள் எந்த ரூபத்திலும் வந்து ஆசீர்வாதம் செய்வார்கள் என சாஸ்திரம் கூறப்படுகிறது. உங்கள் வசதிக்கேற்ப அன்றைய தினம் தானம் தர்மம் செய்து கொள்ளலாம். ஏதேனும்  உயிரினங்களுக்காகவது சாப்பாடு கொடுப்பது என்பது சிறப்பாக கூறப்படுகிறது.

3.படையல் போடுதல் ;

11 மணியிலிருந்து 11; 45 வரை படையல் போட்டுக் கொள்ளலாம். அந்த நேரத்தில் முடியாதவர்கள் மதியம் 1:30 – 2 மணி இந்த நேரத்தில் படையல் போட்டு வழிபாடுகளை செய்யலாம்.

4.விளக்கேற்றுதல் ;

மாலை ஆறு மணிக்கு பிறகு வீட்டில் முன்னோர்கள் படம் முன்பு மண் அகல் விளக்கில்  நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி ஏற்றி வழிபாடுகளை செய்துவிட்டு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி கொள்ளவும். இந்த வழிபாட்டை முறையாக செய்தால் முன்னோர்கள் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பதோடு அவர்களுக்கும் மோட்சம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

மேலும் சாபம், திருமணத்தடை, குழந்தை பேரில் தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழிபாட்டை மனம் உருகி மேற்கொண்டால் நிச்சயம் அனைத்து தடைகளும் நீங்கி தோஷங்களும்  விலகி  வாழ்வில் சுபிட்சம் பெருகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்