ஆர்சிபியுடன் தோல்வி.. டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் போட்டுடைத்த உண்மை?
ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் தோனி கைகொடுக்காமல் மட்டும் போகவில்லை எனவும் டிவி ஒன்றையும் உடைத்துள்ளார் எனவும் ஹர்பஜன் சிங் தன்னிடம் கூறியதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அதிகபட்சமாக கூலாக இருந்து தான் பார்த்திருக்கிறோம். ஒரு சில சமயங்களில், மட்டும் கோபத்தை வெளிக்காட்டியும் பார்த்திருக்கோம். அதில் அவர் கோபப்படாமல் சிக்கல்களான சூழலில் கூலாக இருந்து போட்டியில் அணியை வெற்றிபெற வைப்பது பெரிய அளவில் பேசப்படுவதை விட, சில சமயங்களில் கோபப்பட்டால் அது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு விடும்.
அப்படி தான் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக, தோனி மிகவும் கோபம் அடைந்ததாகவும், அதனால், போட்டி முடிந்த பிறகு கூட அவர் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றதாக அந்த சமயம் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த விஷயம், இந்த ஆண்டு இப்போதும் பேசுபொருள் விஷயமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே பத்திரிக்கையாளர் ஒருவர் போட்டுள்ள அதிர்ச்சி தகவல் தான். சமீபத்தில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ” பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தோனி டிவியை உடைத்ததாக தெரிவித்துள்ளார்.
அதாவது, ஒரு முறை அந்த பத்திரிக்கையாளருக்கு ஹர்பஜன் சிங்கை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது, அவர் ஹர்பஜன் சிங்கிடம் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தோனி கோபப்பட்ட காரணத்தால் தான் வீரர்களுக்கு கை கொடுக்கவில்லையா என்பது போல கேட்டுள்ளார்.
அதற்குப் பதில் கூறியுள்ள ஹர்பஜன் சிங், “அவர் கை கொடுக்காமல் மட்டும் போகவில்லை… கோபத்தில் ட்ரெஸ்ஸிங் அறையில் இருந்த ஒரு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார்” என ஹர்பஜன் சிங் தன்னிடம் கூறியதாக, அந்த பத்திரிகையாளர் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். இவர் பேசிய வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதனை பார்த்த பலரும், அவரே இப்படி கோபப்பட்டு இருக்கிறாரே அவரா கேப்டன் கூல்? என விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். விமர்சனம் ஒரு பக்கம் எழுந்தாலும், மற்றொரு பக்கம் அவ்வளவு பெரிய முக்கியமான போட்டியில் தோல்வி அடைந்தால் யாருக்கென்றாலும் கோபம் வருவது சகஜம் தான்..அவர் எப்போதுமே கேப்டன் கூல் தான் எனவும் ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.