IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!
இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெறாமல் இருந்த இந்த போட்டி, 4-வது நாளான இன்று எந்த ஒரு தடங்களுமின்றி தொடங்கியது. அதன்படி, நடைபெற்ற முதல் செஷன் முடிவில் இரு அணிகளுமே சரிசமனான நிலையில் இருந்து வந்தது.
ஆனால், 2-வது செஷனில் 233 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மோமினுல் 107 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளும், சிராஜ், அஸ்வின் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்படி, இளம் தொடக்கம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி மிக விரைவாக அரை சதம் அடித்து சாதனைப் படைத்தார். அவருடன் இணைந்த கேப்டன் ரோஹித் சர்மா 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
ஆனால், அதன்பிறகும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தது. அதில், ஜெய்ஸ்வால் 72 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டி விக்கெட்டை இழந்து வந்தனர். அதன்படி, கில் 39 ரன்களும், பண்ட் 9 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், கே.எல்.ராகுல் 68 ரன்களும் எடுத்திருந்தனர்.
விராட் கோலி இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்தவர் என்ற உலகசாதனையைப் படைத்தார். மேலும், அதிரடியாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை டிக்லேர் செய்தது.
மேலும், வங்கதேச அணியை விட இந்திய அணி 42 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேச அணியின் பவுலரான மெஹிதி ஹசன் மற்றும் ஷாகிப் தலா 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தனர். அதன் பின் தங்களது 2-வது இன்னிங்க்ஸுக்கு வங்கதேச அணி வீரர்கள் களமிறங்கினர்.
இந்த் போட்டியை ட்ரா செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய வங்கதேச அணிக்கு, இந்திய அணி வீரர்கள் கடுமையாக பந்து வீசினார்கள். அதனால், சற்று சமாளிக்க முடியாக வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அந்த 2 விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
மேலும், 11 ஓவர்கள் பேட்டிங் செய்த வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இன்றைய நாள் முடிவடைந்ததாக அறிவித்தனர். இதனால், வங்கதேச அணி 26 ரன்கள் பின்னிலையில் இருந்து வருகிறது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த போட்டியின் 5-வது மட்டும் கடைசி நாள் போட்டியானது தொடங்கவுள்ளது.