மீந்து போன சாதத்தை வச்சு இப்படி கூட செய்யலாமா?.

சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Rotti (1)

சென்னை – சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

  • பழைய சாதம் =இரண்டு கப்
  • பெரிய வெங்காயம்= 3
  • இஞ்சி= ஒரு துண்டு
  • சீரகம்= ஒரு ஸ்பூன்
  • பச்சை மிளகாய்= 4
  • கடலை மாவு= இரண்டு ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • கருவேப்பிலை சிறிதளவு.

onion (3) (1)

செய்முறை;

முதலில் சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்த சாதத்தை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் .அதனுடன் இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் மற்றும் கடலை மாவு, கொத்தமல்லி, கருவேப்பிலை இலைகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு பிசைந்து கொள்ளவும். இப்போது கையில் சிறிதளவு எண்ணெய் அல்லது தண்ணீரை தொட்டு பிசைந்த மாவை எலுமிச்சை அளவு சைஸில்  எடுத்து உருட்டிக் கொள்ளவும்.

kadala mavu (1)

பிறகு ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி அதிலே இந்த மாவை அடை போன்று தட்டிக் கொள்ளவும் ,இப்போது தோசைக்கல்லை நன்றாக சூடு செய்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள  அடை மாவை சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து பிறகு திருப்பி போடவும். மற்றொரு புறமும்  லேசாக எண்ணெய் தாடவி  பொன்னிறமானதும் எடுக்க வேண்டும். இதுபோல் தட்டி வைத்துள்ள மாவையும் அடை போல செய்து எடுக்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்