எச்சரிக்கை விடுத்த மதுரை ஆட்சியர்….! வைகை அணையில் நாளை முதல் 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது….!!!!
வைகை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மதுரை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகை அணையில் இருந்து நாளை முதல் 3,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். வைகை ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.