“அரசியல் ஆர்வம் இல்லை”…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் நானும் அரசியலுக்குப் போகவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

udhayanidhi

சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் உதயநிதிக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளில் இருக்கும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசியல் குறித்த கேள்விகளுக்கு தங்களின் பதில்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மு.க ஸ்டாலினிடம் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துகொண்ட நபர் ஒருவர், “உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கா சார்”? என கேள்வி எழுப்பி இருப்பார். அதற்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின், ” நிச்சியமாக என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, அதாவது எங்களுடைய குடும்பத்தில் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

அதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில், நெரியாளர் “நீங்கள் அரசியலுக்குவர வாய்ப்பு உள்ளதா”? என கேள்வி எழுப்பி இருப்பார். அதற்கு பதிலளித்த உதயநிதி, “அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் நானும் அரசியலுக்குப் போகவேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. கட்சிக்காக வேலைசெய்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் வரட்டும்” எனப் பேசியிருந்தார்.

இந்த இரண்டு வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், திமுகவினர் சொல்வதொன்று செய்வதொன்று என சிலரும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என கிண்டல் பாணியில் சிலரும், சூழலுக்கு ஏற்றார்போல் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என பலரும் , சிலர் இந்த வீடியோவே AI மூலம் எடிட் செய்யப்பட்டது எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

எது எப்படியாக இருந்தாலும், இளம் தலைவராக அரசியலில் கால்பதித்திருக்கும் உதயநிதி மக்கள் நலனுக்காக என்ன செய்யப்போகிறார் என்ற கழுகு பார்வை அவர் மீது விழத்தொடங்கி இருக்கிறது. அந்த பார்வை மூலம் எழும் கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்