வாரத்தின் முதல் நாளில் சிறிதளவு சரிந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,250 ஆகவும், கிராமுக்கு ரூ.7,535 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,095க்கும், 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,760க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.7,080க்கும், 1 சவரன் தங்கம் ரூ.120 சரிந்து, ரூ.56,640க்கும் விற்கப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,250 ஆகவும், கிராமுக்கு ரூ.7,535 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.101 க்கும், 1 கிலோவுக்கு ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.