ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மேகி ஸ்மித் (89) உடல் நல குறைவால் காலமானார்.

harry potter Maggie Smith

சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மேகி ஸ்மித். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், மக்களுக்கு மத்தியில் இவருடைய பெயரை நீங்காத இடத்தில் வைத்திருக்க உதவிய படம் என்றால் ஹாரி பாட்டர் மட்டும் தான். இந்த படத்தில், அவர் நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் அவரை பெரிய அளவில் பிரபலமாக்க உதவி செய்தது.

நடிகை என்பதை தாண்டி மேகி ஸ்மித் நிஜ வாழ்க்கையில் நல்ல உள்ளம் கொண்டவர். ஏனென்றால், ஹாலிவுட் சினிமாவில் சில பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் வாங்கி கொடுப்பது, பணம் கேட்டு உதவிகோரி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து உதவி செய்வது என பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார். இப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட மேகி ஸ்மித் ரசிகர்களை கண்ணீரை கரைய வைத்து மண்ணைவிட்டு மறைந்துள்ளார்.

89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்திருந்தார்கள். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்கர் விருது

மறைந்த நடிகை மேகி ஸ்மித் கடந்த 1969 ஆம் ஆண்டு தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார். அதற்கு முன்னதாக,  1965 இல் லாரன்ஸ் ஒலிவியரின் ஓதெல்லோவுக்கு ஜோடியாக டெஸ்டெமோனாவாக நடித்ததற்காக அவரது முதல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 1978 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமான கலிபோர்னியா சூட்டில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததற்காக, அவர் சிறந்த துணைப் கதாபாத்திரத்திற்காக தனது இரண்டாவது ஆஸ்கார் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்