“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!
ஜெயம் ரவி விவகாரத்து பிரச்சினைக்கு முன்னதாக அவரை பற்றியும், அவருக்கு மகன் பிறந்தபோது நடந்த விஷயத்தை பற்றியும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் எமோஷனலாக பேசியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சரியான பணம் கொடுக்கவில்லை… சம்பாதிக்கும் பணத்தை ஆர்த்தியும், அவருடைய அம்மாவும் வைத்துக்கொண்டதாகவும் தனக்கு மரியாதை கூட கொடுக்கவில்லை எனவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஜெயம் ரவி குறித்து அவருடைய மனைவி ஆர்த்தி பேசிய பழைய வீடியோக்களும், ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பேசிய வீடியோக்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி ஜெயம் ரவி குறித்தும் அவருக்கு முதலாக மகன் பிறக்கும்போது நடந்த சம்பவங்கள் குறித்து சுஜாதா விஜயகுமார் எமோஷனலாக பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
இது குறித்துப் பேசிய அவர் ” எங்களுடைய குடும்பத்தில் எல்லாரும் பெண்கள் தான். எனக்கு இரண்டு பெண்கள், என்னுடைய தங்கைக்கு இரண்டு மகள்கள், என்னுடை அம்மாவுக்கு இரண்டு பெண்கள். எனவே, எங்களுடைய வீட்டில் எதாவது நிகழ்ச்சி வைத்தாலே பெண்கள் மட்டும் தான் அதிகமாக இருப்பார்கள். எங்களுடைய குடும்பத்தில் முதல் ஆணாகவும், எனக்கு மகனாகவும் வந்தது என்ற ஜெயம் ரவி தான்.
எனக்கு மகன் இல்லை என்பதால் எனக்கு வரப்போகும் மருமகன் தான் எனக்கு மகன். எனவே, ஜெயம் ரவி தான் என்னுடைய மகன் போல நான் பார்க்கிறேன். எங்களுடைய குடும்பத்தில் ஜெயம் ரவி வந்ததைத் தொடர்ந்து மறக்கவே முடியாத அளவுக்கு நடந்த விஷயம் என்னவென்றால், ஆரவ் (ஜெயம் ரவி மகன்) பிறந்தது தான்.
அவன் பிறந்தவுடன் அந்த நாளை நாங்கள் திருவிழா போல வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தோம். சந்தோசம் கலந்த எமோஷனலான விஷயங்களில் அதுவும் ஒன்று. இப்போது அதனைப்பற்றிப் பேசினாலே அழுதுவிடுவேன்” எனவும் சுஜாதா விஜயகுமார் பேசியுள்ளார். இவர் பேசியதைப் பார்க்கையில் குடும்பத்தின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து இருக்கிறார் என்பது தெரிகிறது..அப்படி இருக்கையில், திடீரென ஏன் இவ்வளவு பெரிய சண்டை? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.