குளிரும் தமிழகம்.. 19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது.
அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.