“மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார்”! செந்தில் பாலாஜியை சந்தித்த பின் கே.என்.நேரு பேட்டி!

எதிர்க்கட்சிகளின் விமரசனைகளைக் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என அமைச்சர் கே.என்.நேரு பேசி இருக்கிறார்.

K. N. Nehru

சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி உற்சாக வரவேற்பை கொடுத்தனர். அவரது வருகைக்கு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மேலும் மலர் தூவியும் கொண்டாடி செந்தில் பாலாஜியை வரவேர்த்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, முதல் விஷயமாக மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதையை செலுத்தினர்.

முன்னதாக, தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், ‘என் மீது நம்பிக்கைக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் நன்றியுள்ளவனாய் இருப்பேன் எனவும் ன்மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கிலிருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்’, எனவும் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அடுத்ததாக இன்று காலை அமலாகத் துறையினர் அலுவலகம் சென்று தனது முதல் கையெழுத்தை இட்டார். பின், சிறைக்கு சென்று திரும்பிய அவரை திமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

அதில், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமசந்திரன் போன்ற முக்கிய நிர்வாகிகளும், எம்.பி.ஜோதிமணியும் சந்தித்து நலம் ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். அதே போல அமைச்சர் கே.என்.நேருவும் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில், “முதலமைச்சர் சொன்னது போல கட்சிக்காக செந்தில் பாலாஜி தியாகமாக நின்று வெளியே வந்துள்ளார். அவர் மன உறுதியுடன் வெளியே வந்துள்ளார். 471 நாட்கள் சிறையில் இருந்து விட்டு அவர் வெளியே வந்திருப்பது மிகப்பெரிய விஷயம். இந்த வழக்கில் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்கள் கட்சிக்காரர் வெளியே வந்தால் நாங்கள் தான் வாழ்த்து சொல்லுவோம். விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் செயல். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை”, என கே.என்.நேரு அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்