எம்-பாக்ஸ் தடுப்பு பணிகள்: மாநிலங்களுக்கு பறந்தது மத்திய அரசு கடிதம்!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் Mpox, அதன் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டும்.

Monkeypox in India

டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டது. வேகமாகப் பரவக்கூடிய இந்த வகை குரங்கு அம்மை, இந்தியாவில்| கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் 36 ICMR- கொண்ட ஆய்வகங்கள் மற்றும் இந்த நோயினை ஆரம்பகால கட்டத்தில் கண்டறிய அங்கீகரிக்கப்பட்ட PCR கருவிகள் தயாராக உள்ளன என்று சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

முக்கிய நடவடிக்கைகள்

  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் Mpox, அதன் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்க வேண்டும்.
  • சந்தேகத்திற்கிடமான Mpox தொற்று உடையவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்துவது மிக முக்கியமானது.
  • உறுதி செய்யப்பட்ட Mpox தொற்று உடையவர்களை போதுமான வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்த வேண்டும்.
  • தற்போதைய சிகிச்சை வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறி மேலாண்மையை வலியுறுத்த வேண்டும்.
  • வைரஸை முன்கூட்டியே கண்டறிவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ICMR-அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் PCR கருவிகளைப் பயன்படுத்தவும்.
  • தடுப்பு நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் போது பயத்தை தடுப்பது அவசியம்.
  • மேலும் இந்த நோய் பரவுவதைத் தடுக்க சந்தேகத்திற்குரிய தொற்று உடையவர்கள் குறித்த உடனடியாகப் புகாரளிப்பது அவசியம்.

எம் பாக்ஸ் நோயின் அறிகுறிகள்:

குரங்கு காய்ச்சலால் உடலில் சொறி ஏற்படுகிறது. அது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை உடலில் இருக்கும். காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல், போன்றவற்றுடன் குரங்கு அம்மை நோய் ஆரம்பிக்கலாம்.

குரங்கு அம்மை நோய் சொறி, புண்கள் அல்லது உடலில் கொப்புளங்கள் போல் தெரிகிறது. குரங்கு நோயின் போது ஏற்படும் சொறி, முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், இடுப்பு, பிறப்புறுப்புகள்அல்லது ஆசனவாய் வரை இருக்கலாம்.

இந்த புண்கள் வாய், தொண்டை, ஆசனவாய், மலக்குடல் அல்லது யோனி அல்லது கண்களில் கூட காணப்படும். கிடைக்கக்கூடிய புள்ளிவிவரங்களின்படி, குரங்கு காய்ச்சலால் 0.1% முதல் 10% பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்