“எத்தனை வருஷமானாலும் பரவாயில்லை.. விவாகரத்துக்கு போராடுவேன்”..ஜெயம் ரவி உறுதி!
ஜெயம் ரவி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு விவாகரத்துக்கு கண்டிப்பாக வேண்டும் எனவும், என்னுடைய மகன்களின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே, இவர்களுடைய விவாகரத்து விவாகரமாக மாறியுள்ளது.
இந்த சூழலில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெயம் ரவி விவகாரத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் போராடத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” விவாகரத்து பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ஆர்த்தி தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில் விவாகரத்து பற்றி அவரிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.
Read More – “ஜெயம் ரவியுடன் காதல் இல்லை..இனி நடந்தால் நீங்க தான் காரணம்” – கெனிஷா பரபரப்பு!
என்னிடம் பேசப் பலமுறை முயற்சி செய்வதாகவும் கூறியிருந்தார். ஆர்த்தி சொல்வது போல் அவர் என்னுடன் சமரசம் செய்ய விரும்பினால், எதற்காக என்னை அணுகவில்லை?.நான் அனுப்பிய நோட்டிஸ்க்கு கூட அவர்கள் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை. என்னுடன் சேர விருப்பம் இருந்தால் அதற்குப் பதில் அளித்து என்னைத் தொடர்புகொண்டு இருக்கலாமே. பின் அதனை என் செய்யவில்லை? ” எனக் காட்டத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் தங்களுடைய மகன்களைப் பற்றியும் அவர்களுடைய எதிர்காலம் பற்றியும் பேசினார். “என் குழந்தைகளான ஆரவ் மற்றும் அயன் ஆகியோரின் பாதுகாப்பு எனக்கு முக்கியமான ஒரு விஷயம். எப்போதுமே அதனைப் பற்றி நான் யோசித்துக்கொண்டு அவர்களுக்குத் தேவையான விஷயத்தைச் செய்துகொடுப்பேன். எனது மகன் ஆரவ்வை வைத்து படம் தயாரித்துச் சரியான நேரத்தில் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய பெரிய கனவு.
கடந்த 6 வருடங்களுக்கு முன் நான் என் மகனுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்தபோது, அது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் என்று ஒரு மேடையில் கூறியிருந்தேன். எனவே, அதைப்போலவே அந்த நாளுக்காக மீண்டும் காத்திருக்கிறேன்” எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் விவாகரத்துக்குப் போராடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர் ” எனக்குக் கண்டிப்பாக இந்த விவாகரத்து கிடைத்தே ஆகவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த விவாகரத்துக்காக 10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் அல்லது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீதிமன்றத்தில் போராட நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.