சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜயாவிடம் மாட்டிக் கொள்ளும் ஸ்டுடென்ட்ஸ்.. அப்போ மீனா சொன்னது சரிதான்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 26] எபிசோடில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பையனும் பொண்ணும் வசமாக சிக்கி கொள்கிறார்கள்.

vijaya ,meena (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 26] எபிசோடில் விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது அந்தப் பையனும் பொண்ணும் வசமாக சிக்கி கொள்கிறார்கள்.

விஜயா அண்ணாமலையின் ரொமான்ஸ் ;

மீனா கொலு வைக்கிறது எப்படின்னு முத்துகிட்டயும் சுருதிகிட்டையும் சொல்லிட்டு இருக்காங்க .இத கேட்ட சுருதி எப்பவுமே  ஆன்ட்டி உங்கள  பூக்கட்டை மட்டும் தான் தெரியும்னு சொல்லி  மட்டம் தட்டி பேசுவாங்க ஆனா  உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கு. இப்போ விஜயா வர்றாங்க இதைப் பார்த்த சுருதி நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க என்ன ஆன்ட்டி புதுசா கொலு  எல்லாம் வச்சுட்டு இருக்காங்க.. நல்லா உங்களை யூஸ் பண்ணிக்கிறாங்க..  விஜயாவும் ஆமாமா அப்படின்னு மீனாவ திட்ட ஆரம்பிக்கிறாங்க .இப்போ கொலு  பொம்மை எல்லாம் எடுத்து பார்க்கும்போது அதுல ஒரு பொம்மையை பார்த்ததும் மீனா கையில வாங்கி வச்சுக்கிட்டு இது மாதிரி தாங்க ஒரு பையனும் பொண்ணும் நின்னுட்டு இருந்தாங்க  அப்படின்னு டான்ஸ் ஸ்கூல்ல நடந்ததா சொல்லுறாங்க .

அந்த பொம்மையை பார்க்கும் போது  ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருக்கிறது மாதிரி இருக்கு .இதைக் கேட்ட விஜயா ஏண்டி என்னோட ஸ்டூடண்ட்ஸ் நீ இப்படித்தான் தப்பா சொல்லுவியா பரதநாட்டியத்தில் ஷ்ரிங்கார  ரசம் அப்படின்னு சொல்லுவாங்க அதைத்தான் அவங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்காங்க. இப்போ  மீனா சொல்றாங்க எனக்கு என்னமோ இது தப்பா படுது அப்படின்னு சொல்லவும் முத்து அண்ணாமலை கிட்ட அப்பா அம்மாவை அந்த ஸ்டெப்ப போட சொல்லுங்க அதுக்கு விஜயா ஏங்க அது தனியா எல்லாம் ஆட முடியாது நீங்க இப்படி வந்து நில்லுங்க அப்படின்னு அண்ணாமலை எந்திரிச்சு நிக்க சொல்றாங்க. விஜயாவும் அந்த ஸ்டெப்ப போட்டு காட்டுறாங்க.  இப்போ மீனா சொல்றாங்க அந்தப் பையனும் பொண்ணும் இருந்தது இந்த மாதிரிங்கன்னு அந்த பொம்மையை காட்டுறாங்க.

manoj (7) (1)

உண்மையை அறியும் விஜயா ;

விஜயா கோபப்பட்டு இனிமேல் நீ டான்ஸ் கிளாஸ்க்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாங்க .மனோஜ் சோ ரூம்ல சேல்ஸ்  ஆகல அப்படின்னு ரோகினி கிட்ட பொலம்பிட்டு இருக்காரு. ரோகினியும் திருவிழா டைம் தான்  நல்லா சேல் ஆகும் நீ ஒன்னும் கவலைப்படாதே  . இப்ப ஒருத்தர் வர்ராரு  வந்து நல்லா குவாலிட்டியான பொருளுக்கு லிஸ்ட் போடவும் ரோகிணி நீ சொன்னது சரியா போச்சு  பெரிய கஸ்டமரா வந்திருக்கிறார். அவர் போட்ட லிஸ்ட் எல்லாம் பார்த்தா நமக்கு நல்லா நிறைய லாபம் கிடைக்கும் அப்படின்னு சொல்லி பெருமையா பேசிட்டு இருக்காரு. மனோஜ்  அவர்கிட்ட எப்ப டெலிவரி பண்ணனும் அப்படின்னு கேட்குறாரு . அதுக்கு அவர் கேரளாவுல  ஒரு லாட்டரி ஒன்னு வர வேண்டியது இருக்கு கண்டிப்பா எனக்கு தான் லாட்டரி கிடைக்கும் கிடைச்சதும் நான் சொல்றேன் இப்போ  நிலம் பார்க்கிறதுக்காக போறேன் நீங்க அங்கே தான் டெலிவரி பண்ற மாதிரி வரும் சொல்ல மனோஜ் கோவம் வந்தது.

மரியாதை இல்லாம பேசி வெளியில் அனுப்பிறாரு .இப்போ ஒரு முஸ்லிம் பாய் சாம்பிராணி போட்டு கடைக்கு உள்ள வராரு.. வந்து மனோஜ் கிட்ட உங்கள ஒருத்தர் அம்மன் கோவிலுக்கு வர சொல்லி இருக்கிறார் அப்படின்னு சொல்லுறாரு  உடனே மனோஜ் இன்னைக்கு அந்த பிராடு வசமா மாட்டிக்க போறான் ரோகிணி நீயும் என் கூடவா அப்படின்னு சொல்றாரு .ரோகிணிக்கு ஒரே பதட்டமா இருக்கு கண்டிப்பா அது அந்த பிஎ வேலையாக தான் இருக்குமோ அப்படின்னு நினைக்கிறாங்க  . இப்போ விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டே அந்த பையனையும் பொண்ணையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க மீனா சொன்ன மாதிரி அவங்களோட நடவடிக்கை சரியில்லாம தான் இருக்கு.. விஜயா முறைச்சிட்டே பாத்துட்டு இருக்காங்க இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்