குக் வித் கோமாளியில் விலகல்! மணிமேகலை எடுத்த அடுத்த அதிரடி முடிவு?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

manimegalai

சென்னை : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்றே கூறலாம். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்து நிகழ்ச்சியை வெறுக்கும் அளவுக்குக் கொண்டு வரும் என யாருமே நினைத்திருக்க மாட்டோம். அந்த அளவுக்கு, மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையைச் செய்ய விடாமல் பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தை மட்டும் தான் செலுத்தியதாகக் கூறி, மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார். எனவே, இனிமேல் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் குக் வித் கோமாளியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதே சமயம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலே பிரச்சினை ஆன சூழலில், அவர் எப்படி அதிகமாகச் சண்டை வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்ற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்தது. இந்த சூழலில், லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அது என்னவென்றால், மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்யவில்லையாம்.

அவருக்கு, ஜீ தமிழ் தொலைக்காட்சியிலிருந்து சில நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் வருகிறதாம். இதன் காரணமாக, அவர் விஜய் தொலைக்காட்சியிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும், மணிமேகலை தொகுத்து வழங்கவுள்ள அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்