பிக் பாஸ் வீட்டில் குக் வித் கோமாளி பிரபலங்கள்! லிஸ்டில் மணிமேகலை?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்களான அன்ஷிதா அக்பர்ஷா, VTV கணேஷ், சுனிதா , மணிமேகலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

manimegalai BB 8

சென்னை : பிக் பாஸ் தமிழ் 8 -வது சீசன் நிகழ்ச்சியானது வரும், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது என்றால், அதில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்களுடைய பெயர்களும் அரசல், புரசலாக வெளியாவது வழக்கமான ஒன்று . அப்படிக் கடந்த சில நாட்களாகவே, பல பிரபலங்களுடைய பெயர் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின் படி, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்துகொள்ளவிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் யாரெல்லாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்…

மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து, பிரியங்காவுடனான பிரச்சினை காரணமாக, மணிமேகலை விலகியதிலிருந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. எனவே, அவர் தொடர்பான செய்திகளும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான், அவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே தனக்குக் காசு பணத்தை விடச் சுயமரியாதை தான் முக்கியம் அது அங்குக் கிடைக்கவில்லை என வெளிப்படையாகவே கூறி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார். அப்படி இருக்கும் மணிமேகலை எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

VTV கணேஷ்

காமெடி நடிகர் VTV கணேஷ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்ததை விட குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். இதன் காரணமாக, அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு வந்தால் மக்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கும் என விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டு அவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுனிதா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்குத் தெரிந்த தமிழை அழகாகப் பேசி மக்கள் மனதில் இடம்பிடித்த சுனிதா பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அன்ஷிதா அக்பர்ஷா

இவர் விஜய் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருடைய முகத்தைப் பலருக்கும் தெரியப்படுத்த உதவியது குக் வித் கோமாளி சீசன் 5 தான். இந்த சீசனில் கோமாளியாகக் கலந்து கொண்டு பல கெட்டப்கள் போட்டு மக்களைக் கவர்ந்துவிட்டார். இவருக்கு இன்னும் பிரபலமாக வாய்ப்பு கிடைப்பது போல, பிரமாண்ட வாய்ப்பான பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேற்கண்ட பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. தகவல்களாக மட்டும் தான் தெரிய வந்துள்ளது. உண்மையில் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்