காஷிமோவ் செஸ் தொடர் : விதித்துக்கு பதிலாக களமிறங்கும் தமிழக வீரர்! காரணம் என்ன?
காஷிமோவ் செஸ் தொடரின் நடப்பு சாம்பியனான விதித் குஜராத்திக்கு மாறாக தமிழக செஸ் வீரர் அரவிந்த் சிதம்பரம் விளையாடவுள்ளார்.
அஜர்பைஜான் : வரும் செப்-25 முதல் செப்-30 வரை அஜர்பைஜான் நாட்டில் காஷிமோவ் நினைவு செஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஏற்கனவே இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டரான விதித் குஜராத்தி தேர்வாகி இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு பதிலாக தமிழக கிராண்ட்மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம் விளையாடவுள்ளார்.
இதற்கு காரணம் என்னவென்றால், காஷிமோவ் நினைவு செஸ் தொடரின் நடப்பு சாம்பியனான விதித் குஜராத்தி பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். சமீபத்தில் 3 நாள் அரசாங்க சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் இந்தியா திரும்பினார். இதனால், ஏற்கனவே தீர்மானித்தது போல பிரதமர் மோடியை நேரில் சந்திக்க விதித் குஜராத்தி தீர்மானித்துள்ளார். அந்த சந்திப்பு போட்டி இருக்கும் நாளில் வருவதால் வேறு வழியின்றி அவரால் அந்த தொடரை விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால், அவருக்கு பதிலாக தற்போது தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம் அஜர்பைஜான் சென்று இந்த தொடரில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், இந்த தொடருக்காக அஜர்பைஜான் சென்றிருந்த விதித் தற்போது இந்திய திரும்பவுள்ளார்.
இந்த தொடரில் தற்போது இந்தியா அணி சார்பாக தனி ஒரு ஆளாக அரவிந் சிதம்பரம் விளையாடவுள்ளார். இதனால், இந்த முடிவுகள் சற்று வருத்தமளிக்க தக்க இருந்தாலும் இந்த அறிய வாய்ப்பை அரவிந்த் சிதம்பரம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.