கன்னியாகுமரி மேம்பாலத்தை மத்திய அமைச்சர் தீடீர் ஆய்வு…!!
கன்னியாகுமரி ,
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியில் கடந்த 1½ ஆண்டுகளாக மேம்பாலப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் வருகின்ற 22ஆம் தேதி கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகின்றது.அதற்கு தமிழக முதல்வர் வருகின்றார்.இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியும் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து நாகர்கோவில் வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பார்வதிபுரம் மேம்பாலப்பணிகளை நேற்று காலை திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
DINASUVDU