ஆரம்பமே இப்படியா? “பிக் பாஸ்” செட்டில் விபத்து- ஒருவர் காயம்!

சென்னை பூந்தமல்லி அருகே பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின் போது விபத்து ஏற்பட்டதில் வட மாநில தொழிலார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

bigg boss EVP Film City

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக, நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், ஆரம்பமே இப்படியா என்கிற வகையில், பிக் பாஸ் செட்டில் விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே, EVP பிலிம்சிட்டியில் பிக்பாஸ் பிக் பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஊழியர் ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். நிகழ்ச்சி தொடங்க, இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் பிக்பாஸ் செட் அமைக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக, இல்லாமல் இந்த முறை பிரமாண்டமாக பிக் பாஸ் வீடு அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது பராமரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான வேலைகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வழக்கம் போல, இன்று வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாயின் கான் வேலை செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருடைய இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். EVP பிலிம்சிட்டியில் தொடர்ச்சியாக விபத்து நடந்து வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

ஏனென்றால், இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே இந்தியன்- 2 படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதைப்போல, காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதைப்போல, பிகில் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்ற தொழிலாளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்