ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு.!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,120 ஆகவும், கிராமுக்கு ரூ.7,515 ஆகவும் விற்பனையாகிறது.

gold price

சென்னை : ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்றம்  சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,000ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.56,000ஆகவும் இருந்தது.

இந்நிலையில், இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.60 அதிகரித்து ரூ.7,060 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.175-ம், பவுனுக்கு ரூ. 1,400-ம் உயர்ந் துள்ளது.

today gold price
today gold price [file image]
அதேநேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,120 ஆகவும், கிராமுக்கு ரூ.7,515 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை தொடர்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்றைய தினம் வெள்ளி விலை 1 கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ரூ.101 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.101,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்