இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!
இலங்கையின் 16ஆவது இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக் கொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில்ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்
ஹரிணி, இலங்கையின் 16ஆவது இடைக்கால பிரதமராகவும் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்று உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில், பாராளுமன்றத்திற்கு நுழைந்தார்.