பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !

தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுகிறது.

Viththagar Viruthu

சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர் மேத்தாவிற்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், இந்த விருதுடன் சேர்த்து ரூ.10 ரொக்கமும் மற்றும் நினைவுப் பரிசும் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ஆம் நாளான்று வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களால் கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர், திரைப்பட இயக்குநர் திரு.கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.

அதன்பின், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுமை காரணமாக ஓய்விலிருக்கும் திரு.ஆரூர்தாஸ் அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று (03.06.2022) அன்று இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள்”, என அந்த செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்