அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்தவர் ! இங்கிலாந்து முன்னாள் வீரர் பேச்சு!

நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து முன்னாள் வீரரான மான்டி பனேசர் அஸ்வின் மற்றும் லியோனை குறித்து பேசி இருக்கிறார்.

Lyon - Ashwin

சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். மேலும், முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிய போது தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி சரிவிலிருந்தும் மீட்டார்.

மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 6-வது சத்தத்தை பூர்த்திச் செய்து சாதனைப் படைத்திருந்தார். அதே போல மறுமுனையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களை விளையாடி வருகிறது.

ஆனால், அந்த ஆஸ்திரேலிய அணியில் நாதன் லியோன் இடம்பெறவில்லை. டெஸ்ட் போட்டி என்றாலே ஆஸ்திரேலிய அணிக்கு தூணாக விளங்கும் இவர் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு தன்னை ஆயுத்தமாக்கி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மான்டி பனேசரிடம், டெஸ்டில் சிறந்த பந்து வீச்சாளர் அஸ்வினா? அலல்து லியோனா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்த ஸ்பின் பவுலர் என கூறி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர்,“நான் நாதன் லியோனைத் தான் கூறுவேன். நாதன் லியோன் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், இந்தியாவில் அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவர் அஸ்வின். அவர் பந்துவீசும்போது ஒரு பேட்டர் போல நினைத்து பந்து வீசுவார் என்று நினைக்கிறன்.

அதனால், அவரால் பேட்ஸ்மானின் பலவீனத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அது அவரது மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருக்கிறது. தற்போது அஷ்வின் இங்கிலாந்து அணியிலிருந்தால், விளையாடும் திறன் உள்ள இளைஞர்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவரை ஓய்வு பெறச் சொல்லியிருப்பார்கள்.

அஸ்வின் இந்தியாவில் விளையாடுவதில் சிறந்தவர் அதே நேரம் லியோன் ஒட்டுமொத்தமாக அனைத்து மைதானத்திலும் விளையாடுவதில் சிறந்தவர்”, என்று அந்த பேட்டியில் மான்டி பனேசர் கூறியிருக்கிறார். அஸ்வின் மற்றும் லியோன் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள். நாதன் லியோன் 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 530 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

அதே போல அஸ்வின் 101 போட்டிகளில் விளையாடிய 522 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதல் இடத்தில் அஸ்வின் இருந்து வருகிறார். லியோனும் 801 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்து வருகிறார். வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டியில் இவ்விருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்