“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

தமிழ் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Selvaraghavan

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொது தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.. தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ” எனக்கு ஒரு வேண்டுகோள், கெஞ்சி கேட்கிறேன், தாழ்மையுடன் கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் அப்படின்னு பாரதியார் சொன்னாங்க. இது எவ்வளவு உண்மை என்றால் தமிழ் ஆல்ரெடி ஐ சி யூ வென்டிலே படுத்து இருக்கு.

எங்கு பார்த்தாலும் இங்கிலீஷ் இங்கிலீஷ் தான் இங்கிலீஷ் தெரியாதவர்கள் கூட திக்கித் திணறி இங்கிலீஷில் தான் பேச ட்ரை பண்றாங்க. தமிழில் பேசுவதை அவமான மாகவும் அருவருக்கத்தக்கதாகவும் நினைக்கிறார்கள்.

நீங்க எங்க போனாலும் தமிழ்ல பேசுங்க அப்படி பேசுறப்போ யாராச்சு அத அவமானமா பாத்தா திரும்பி பாத்து மொறச்சி இன்னும் சத்தமா பேசுங்க. உலகத்துல எல்லா நாட்டுயும் அவுங்க தாய் மொழில தான் பேசுவாங்க english-ல பேச முயற்சிக்கவும் மாட்டாங்க.

எனக்கு இங்கிலித்தில் பேசுக்கும் அவசியம் புரிகிறது, சத்தியமாக நான் ஸ்கூளில் காலேஜில் எல்லாம் வந்து எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறேன், எவ்வளவு வருத்தப்பட்டு  அழுத்திருக்கிறேன். இங்கிலீஷ் தெரியாமல். ஏதோ ஏனோதானோன்னு இங்கிலீஷ் படித்து வெளியே வந்து விட்டோம் .

அதன் பிறகு, தான் ஒரு வெறி வந்தது. அதனால் ஹிந்து எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகை, இங்கிலீஷ் புத்தகங்களும் அதிகம் படிக்கத் தொடங்கினேன். அதிலும் வார்த்தையின் அர்த்தம் புரியாததற்கு அருகில் ஒரு டிக்ஷனரி வைத்துகொள்வேன். அப்படிதான் சில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்.

இது சற்று கடினமான முயற்சி தான், ஆனால் இதை செய்ய ஒரு கட்டத்தில் அது சீராக வந்துவிட்டது. அதிலும், நான் சினிமாவிற்கு வந்த பிறகு தான் நன்றாக பேச தொடங்கினேன். ஆனால் இன்றைக்கும் எனக்கு அவ்வளவு அழகாக பேச இங்கிலீஷ் தெரியாது.

அதைப் பற்றி எனக்கு துளியும் கவலை இல்லை. நான் தமிழன் நான் நான் எங்கு சென்றாலும் தமிழ் தான் பேசுவேன். அதேபோல நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீங்க தமிழில் பேசுங்கள்.. எங்கு போனாலும் தலை நிமிர்ந்து தமிழில் பேசுங்கள்.

குரலை உயர்த்தி தமிழில் பேசுங்கள். எதிரில் இருப்பவர்கள் உங்களை அவமானமாக பார்த்தால் அவர்களை முறைத்து விட்டு தமிழில் பேசுங்கள். அதே நேரம், ஏதேனும் பெண்கள் உங்களை தமிழில் பேசுவதனால் முகம் சுளித்து பார்த்தால், அப்படிப்பட்ட அந்தப் பெண் நமக்கு தேவையில்லை.

தமிழ் பெண்ணே போதும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகத்தில் நீங்கள் எந்த நாட்டிற்கு சென்று பார்த்தாலும் எல்லோரும் அவர்களது தாய் மொழியில் தான் பேசுவார்கள் . அவர்களெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு முயற்சி செய்யவே மாட்டார்கள்.

நீங்கள் இணையத்தில் கூட தேடிப் பார்க்கலாம். நான் சத்தியமாக உண்மையை தான் சொல்கிறேன். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட அங்கிருந்து இங்கு வந்து அழகாக தமிழை கற்று கொண்டு, தமிழில் பேசுகிறார்கள்.

தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். அவ்வளவு ஏன் உலகில் பழமையான மொழி எது தமிழ் தான். இதை நான் கெஞ்சி கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள் அல்லது வேண்டுகோளாகவும் வைத்துக் கொள்ளுங்கள். காலம் காலமாக உள்ளுக்குள் ஒளிஞ்சி கிடந்த ஒரு கருத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்.” இவ்வாறு பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்